வடக்கின் கில்லாடி தொடரில் முக்கிய வெற்றியை பெற்ற ஊரெழு ரோயல் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழகம், தமது நூற்றாண்டு விழாவையொட்டி ‘வடக்கின் கில்லாடி யார்;” என்னும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றை அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடத்தி வருகின்றது.

வருடாவருடம் யாழின் கில்லா என நடத்தப்பட்டு வந்த இந்தச் சுற்றுப்போட்டியானது, இந்த வருடம் வடக்கின் கில்லாடியாக மாற்றப்பட்டு, வடமாகாணம் தழுவிய வகையில் மொத்தம் 32 அணிகள் இந்தச் சுற்றில் பங்குபற்றின.

இந்தச் சுற்றுப்போட்டியின் 3 ஆம் இடத்துக்கான ஆட்டம் நேற்று முந்தினம் இரவு நடைபெற்றது.

இதில் ஊரெழு றோயல் அணியை எதிர்த்து கிளிநொச்சி உருத்திரபுரம் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களையும் பதிவு செய்யவில்லை.

இரண்டாவது பாதியாட்டத்தில் தமக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை றோயல் அணி கோலாக மாற்றியது.

தொடர்ந்து, உருத்திரபுரம் அணிக்கும் பெனால்டி வாய்ப்பொன்று கிடைக்க அவ்வணியும் அதனைக் கோலாக்கிக போட்டியை சமப்படுத்தியது.

இறுதி நேரத்தில் றோயல், அணி அதிரடியாக இரண்டு கோல்களை அடித்தது.

முடிவில் றோயல் அணி, 03:01 என்ற கோல்கள் கணக்கில் வென்று மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்தச் போட்டியில் றோயல் அணி சார்பாக எடிசன், கபில் மற்றும் பிரசன்னா ஆகியோர் தலா 1 கோலை அடித்தனர்.

ஆட்டநாயகனாக பிரசன்னா தெரிவு செய்யப்பட்டார்.

இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு குருநகர் பாடும்மீன் அணியும் இளவாலை யங்ஹென்றிஸ் அணியும் மோதவுள்ளன.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers