கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியல்: எந்த அணி முதலிடத்தில்?

Report Print Kabilan in கால்பந்து

பிபா கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் 6 இடங்கள் முன்னேறியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து தொடரில், பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து அணி குரோஷியாவிடம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் பிபா கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 12வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியும் 6 இடங்கள் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பெல்ஜியம் அணி 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

சமபுள்ளிகளை பெற்றிருப்பதால் ஸ்பெயின், டென்மார்க் இரு அணிகளும் 9வது இடத்தை பிடித்துள்ளன. அர்ஜெண்டினா 6 இடங்கள் பின்தங்கி 11வது இடத்தைப் பிடித்துள்ளது.

தரவரிசைப் பட்டியல்

  1. பிரான்ஸ்
  2. பெல்ஜியம்
  3. பிரேசில்
  4. குரோஷியா
  5. உருகுவே
  6. இங்கிலாந்து
  7. போர்த்துகல்
  8. சுவிட்சர்லாந்து
  9. ஸ்பெயின்

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers