மைதானத்தின் நடுவில் திடீரென தோன்றிய வீரர்! புதுமையான முறையில் கால்பந்து வீரர் அறிமுகம்

Report Print Kabilan in கால்பந்து

ஸ்பெயினைச் சேர்ந்த கிளப் அணி ஒன்று தங்களது வீரர் ஒருவரை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்பெயினின் கிளப் கால்பந்து அணியான வில்லாரியஸ், சமீபத்தில் தனது அணியின் முக்கிய வீரர் ஒருவரை அறிமுகம் செய்தது.

இதற்காக அணியின் மைதானத்தின் நடுவில் ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு, அங்கு ஒரு கண்ணாடி உருளை வைக்கப்பட்டது. அந்த கண்ணாடி உருளையை மேஜிக் நிபுணர் ஒருவர் சுற்றி வந்தார்.

புகை மூட்டமாக இருந்த அந்த கண்ணாடி உருளையில் இருந்து கால்பந்து வீரரான சாண்டி கசோர்லா வெளியே வந்தார். இவர் அர்சனெல் அணியில் இருந்து மீண்டும் வில்லாரியஸ் அணிக்கு தற்போது திரும்பியுள்ளார்.

எனவே, அவரது வருகை புதுமையாக இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் இந்த முயற்சியை செய்துள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்