மெஸ்சியை எங்களுக்கு தர வேண்டும்: உரிமை கோரும் கிளப் அணி

Report Print Kabilan in கால்பந்து

இத்தாலியின் கிளப் கால்பந்து அணியான ரோமாவின் உரிமையாளர், பார்சிலோனா அணி எங்களுக்கு மெஸ்சியை தர வேண்டும் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் இளம் கால்பந்து வீரர் மால்கம்(21), பிரான்ஸின் போர்டியாக்ஸ் எனும் கிளப் அணிக்காக விளையாடி வந்தார். இவரது ஆட்டத்தைப் பார்த்த இத்தாலியின் கிளப் அணியான ரோமா மால்கமை வாங்க முயற்சித்தது.

அதற்கான ஒப்பந்தத்தை ரோமா அணி தயார் செய்த நிலையில், ஸ்பெயினின் பிரபல அணியான பார்சிலோனா அவரை ஒப்பந்தம் செய்து வாங்கிக் கொண்டது. இதனால் ரோமா அணியின் உரிமையாளர் கோபமடைந்தார்.

இந்நிலையில் அவர் கூறுகையில், ‘மால்கமை எங்களிடம் இருந்து பார்சிலோனா அபகரித்துக் கொண்டது. அதற்கு பதிலாக மெஸ்சியை அனுப்ப வேண்டும்’ என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers