20 வயது இளைஞன் போல மாஸ் காட்டும் ரொனால்டோ: அவரின் உடல் ரகசியம் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in கால்பந்து

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு தற்போது 33 வயது ஆகியுள்ள நிலையில் 20 வயது வீரருக்குரிய உடல்திறன் இருப்பது தெரியவந்துள்ளது.

சராசரியான கால்பந்து வீரரின் உடலில் உள்ள கொழுப்பைவிட ரொனால்டோவின் உடலில் 7 சதவிகிதம் குறைவாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,

அவரின் உடலில் 50 சதவிகிதத் தசைகள் உள்ளனவாம். சராசரி தொழில்முறை கால்பந்து வீரரைவிட 4 சதவிகிதம் அதிகம். உடலுக்கு, தசைகள்தான் இன்ஜின். தசைகளுக்கு ஆற்றல் தேவை எனும்போது உடலில் கொழுப்பை எரிக்கின்றன.

உடல் பிட்னெஸுக்குத் தசைகள் மிக முக்கியம். ரொனால்டோவின் body mass 50 சதவிகிதம் இருப்பதால், இன்னும் மூன்று ஆண்டுகள் வரை இதே வேகத்தில் அவரால் விளையாட முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில், மணிக்கு 33.98 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிய ஒரே வீரர் 33 வயதுடைய ரொனால்டோ ஆவார். வேறு எந்த வீரரும் இந்த வேகத்தை எட்டவில்லை. 20 வயதான கிலியன் எம்பாப்பேகூட இவ்வளவு வேகத்தில் ஓடவில்லை.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்