7 நாட்களில் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் சூப்பர் பானம்.. தினசரி குடிச்சு பாருங்க

Report Print Kavitha in உணவு
1324Shares

இன்றைய காலத்தில் பல பெண்களும், ஆண்களும் சரி தொப்பை பிரச்சினையால் அவஸ்தைப்படுவதுண்டு.

அதிக அளவில் இனிப்புகள் மற்றும் உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதாலும் குளிர்பானங்களை குடிப்பதாலும் தேவையற்ற கொழுப்பு சேகரிப்புக்கு ஆளாகின்றனர்.

இது, அதிகப்படியான உணர்வு வீக்கம், சோர்வு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது உங்கள் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதிகப்படியான உணவு உட்கொள்வது உங்கள் உடல் எடையை குறைக்கும் திறனை பாதிக்கும்.

இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்து சிறந்ததாகும். இதற்காக பலர் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் சூப்பரான பானம் ஒன்றினை எப்படி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • 1 தேக்கரண்டி கிரீன் டீ
  • 6-7 புதினா இலைகள்
  • அரை எலுமிச்சை
  • 2-3 கப் தண்ணீர்
  • 1 தேக்கரண்டி தேன் (விரும்பினால்)

தயாரிப்பு முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். அதனை அடுப்பில் இருந்து எடுத்து, பச்சை தேயிலை கொண்ட கப்பில் ஊற்றுவதற்கு முன் சில நிமிடங்கள் காத்திருக்கவும்.

சூடான நீரை ஊற்றுவதற்கு முன்பு சுவைக்காக புதினா இலைகளை சேர்க்கலாம். இதை 2 நிமிடம் மூடி வைத்து பின்னர் வடிகட்டவும்.

பிறகு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கிளறி நன்கு கலக்கவும். உங்கள் கிரீன் டீ டிடாக்ஸ் பானம் இப்போது தயாராக உள்ளது. நீங்கள் விரும்பினால் இஞ்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உங்கள் தினசரி வழக்கத்தில் 2-3 கப் கிரீன் டீ சேர்ப்பது நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்கும்.

வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைந்து ஆரோக்கியமான உணவு எடை குறைக்கவும், தீங்கு விளைவிக்கும் தொப்பை கொழுப்பைத் தடுக்கவும் உதவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்