உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் உண்ணும் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
அந்தவகையில் நோய் எதிர்ப்பு சகத்தியை அதிகரிக்கும் அற்புத சூப் ஒன்றை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சோயா பீன்ஸ் - 50 கிராம்
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- கேரட் - 1
- மிளகுதூள் - சிறிதளவு
- தக்காளி - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு
- சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி
- கிராம்பு - 2
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- பட்டை, பூண்டு, தண்ணீர் - தேவைக்கு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
குக்கரில் தண்ணீர்விட்டு தக்காளி, கேரட், வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கிப் போடவும். பட்டை, கிராம்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் கலந்து மிதமான சூட்டில் 2 விசிலுக்கு வைக்கவும்.
முதலிலே சோயா பீன்சை தண்ணீரில் ஊறவையுங்கள். அதையும் குக்கரில் சேர்த்து வேகவிடுங்கள்.
வெந்ததும் இறக்கி நன்றாக மசித்து வடிகட்டவும். பின்பு இது 300 மி.லி. அளவு வரும்வரை சூடாக்கி வற்றவைக்கவும்.
பின்பு போதுமான உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பருகவும். காரத்திற்கு மிளகுதூள் கலந்து சூடாக பருகலாம்.