இட்லி பெயர் உருவான சுவாரஸ்யமான தகவலை பற்றி தெரிந்து கொள்வோம்

Report Print Nalini in உணவு
968Shares

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு வகையாகும். இட்டரிக' என்று ஏழாம் நூற்றாண்டிலும் 'இட்டு அவி' 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட நிலையில் பின்பு 'இட்டு அவி' என்ற இரட்டைச் சொல் மருவி 'இட்டலி' என்ற ஒரு சொல்லாய் திரிந்து அதன் பின்னர் 'இட்லி' என்று ஆனதாகக் பண்டைய நூல்களில் குறிப்புகள் உள்ளன.

8ம் நூற்றாண்டில் இட்லி தயாரிக்கப்பட்டதாக குறிப்புக்கள் உள்ளன. ஆனால், இட்லி தென்னிந்தியாவில் தொடங்கியது இல்லை என்ற செய்தி நமக்கு ஆச்சரியமளிப்பதாகவே இருக்கும்.

ஒரு இட்லியில் சராசரியாக 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது. இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும்.

ரவா இட்லி, சாம்பார் இட்லி, ரச இட்லி, நெய் இட்லி, வெந்தய இட்லி சாம்பார் இட்லி, ஃப்ரைடு இட்லி, மசாலா இட்லி, சில்லி இட்லி, கைமா இட்லி... என இட்லி வகைகள் ஏராளம்.

மங்களூர் இட்லி

முதே என்று அழைக்கப்படும் ஒருவகை பதார்த்தம் இங்கு சிறப்பாகும். இதை சிலர் மங்களூர் இட்லி என்றும் கூறுகின்றனர். பார்ப்பதற்கு இட்லி போன்று இருக்காது, புட்டு போன்ற வடிவத்தில் இருக்கும். இதன் சுவை உங்களை நூறு சதம் அடிமையாக்கிவிடும்.

காஞ்சிபுரம் இட்லி

பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட மூன்றையும் கலந்து பாம்பே ரவை அளவு பதத்தில் திரித்துக்கொண்டு அதில் சலித்து இட்லிக்கு மாவை தயார் செய்து கொஞ்சம் நெய்விட்டு அவித்து காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும்.

குஷ்பூ இட்லி

சினிமா நடிகை குஷ்பூவின் பெயரில் உருவானதான் இந்த குஷ்பூ இட்லி. இந்த இட்லி கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பெயரிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

சன்னாஸ் இட்லி

இந்த இட்லி பார்ப்பதற்கு ஓரளவு இட்லி போல தெரிந்தாலும் இதன் வடிவம் சற்று வித்தியாசமாகவே நமக்கு இருக்கும். இது கோவாவுல மிகப் பிரபலம்.

தட்டே இட்லி

தட்டே இட்லி மிகவும் சுவையானது. கிட்டத்தட்ட இது தமிழகத்தின் இட்லி சுவையை ஒத்ததாகும். ஒருமுறை வாங்கி சாப்பிட்டால் போதும் அந்த வேளைக்கு பசியே இருக்காது. வயிறும் மனதும் ஒருங்கே நிறையும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்