இனிவரும் காலத்தில் மிகவும் பிரபல்யமான கடலுணவாக இதுதான் இருக்குமாம்

Report Print Givitharan Givitharan in உணவு
227Shares

உணவுப் பிரியர்களின் தெரிவுகளுள் ஒன்றாக கடலுணவுகளும் அனேகமாக இருக்கும்.

இவற்றில் இறால், நண்டு, கணவாய் போன்ற பல்வேறு கடலுயிரினங்கள் காணப்படும்.

இப்படியிருக்கையில் எதிர்காலத்தில் ஜெலி மீன்களும் பிரபல்யமான கடலுணவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சுமார் 100 வகையான கடலுயிரினங்கள் கடலுணவாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இவை அழியும் ஆபத்தை எதிர்நோக்கியவையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கடந்த 2006 தொடக்கம் 2014 ஆம் ஆண்டுவரையான காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 92 இனங்கள் இவ்வாறு இனங்காணப்பட்டிருந்ததுடன் அவற்றில் 11 இனங்கள் மிகவும் பாரதூரமாக அழியும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்