சிறுநீரக கற்களை அடியோடு கரைக்க இந்த சூப்பை குடிச்சு பாருங்க!

Report Print Kavitha in உணவு
1081Shares

சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.

சிறுநீரக் கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்துவதுடன், சில நேரத்தில் அந்த கற்கள் சிறுநீரகப் பாதையில் அடைத்துக் கொண்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் செய்துவிடும்.

இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் சரி செய்யமுடியும். அந்தவகையில் தற்போது சிறுநீரக கற்களை கரைக்கும் சூப்பரான சூப் ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • மணத்தக்காளி கீரை- 1 கப்
  • மணத்தக்காளி விதை- 2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்-6
  • தக்காளி - 1
  • பூண்டு- 1
  • தேங்காய் பால் - 1 கப்

செய்முறை

மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், இடித்து வைத்த பூண்டு போட்டு வதக்கவும்.

பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அனைத்து லேசாக வதக்கினால் போதும்.

வதங்கியதும் தேங்காய்பால் சேர்த்து கொதி வந்ததும் விதை, கீரையை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு போதுமான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்