வயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய் பால் சூப்! இப்படி செய்து பாருங்க

Report Print Kavitha in உணவு
209Shares

இன்றைய காலகட்டத்தில் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் ஒன்று.

உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம்.

இதனை ஆரம்பத்திலே சரி செய்வது சிறந்தது. அந்தவகையில் வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் உகந்த ஆரோக்கியமான தேங்காய்பால் சூப் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் பால் - 1 கப்
  • பெரிய வெங்காயம் - 3
  • இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு
  • எலுமிச்சை பழம் - பாதி பழம்
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு
  • பச்சைமிளகாய் - 6
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு
  • பசும்பால் - 1 கப்
  • சோள மாவு - 2 ஸ்பூன்

செய்முறை

வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்யை விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொதிக்கும் கலவையுடன் ஊற்றவும்..

நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்