சாப்பிட்டதும் தப்பித்தவறி கூட இதை பண்ணிடாதீங்க!

Report Print Nalini in உணவு
268Shares

சிலர் சாப்பிட்டு முடித்ததும் ஒரு கப் காபியோ, டீயோ குடித்தால்தான் திருப்தியாக இருப்பதாக உணர்வார்கள். ஆனால் உண்மையில் சாப்பிட்டு முடித்தவும் அதையெல்லாம் செய்யவே கூடாது.

நமக்கு தெரியாமல் செய்யும் ஒவ்வொரு காரியமும் நமக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். சில உணவு சாப்பிடும்போதும், சாப்பிட்ட பின்பும் சில கோட்பாடுகளை வகுத்து, அதன் வழி நடந்து வந்தால் நாம் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கலாம்.

அதனால் சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நம் முன்னோர்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது ஒரு அறிவியல் பூர்வமான நல்ல விஷயங்கள் அடங்கி இருக்கும்.

எனவே சாப்பிட்டதும் எதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு இப்போது பார்ப்போம்

பழங்கள் சாப்பிடுதல்

  • சாப்பிட்டதும் பழங்கள் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால்ல இவை வயிற்றில் வாயுவை உண்டாக்கும். இரண்டு மணி நேரத்துக்கு பின் பழங்களை சாப்பிடுவது நல்லது.

சிகரெட் பிடித்தல்

  • உணவு சாப்பிட்டதும் ஒரு சிகரெட் பிடிக்கக் கூடாது. இதனால் மிக விரைவில் நமக்கு புற்றுநோய்கள் வர வாய்ப்பு இருக்கின்றன.
  • உணவு சாப்பிட்டதும் சிகரெட் பிடித்தால் அந்த புகையானது மிக விரைவில் நமது உணவு குழாயில் செல்லும். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படலாம்.

பெல்ட் தளர்த்துதல்

  • சாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டை தளர்த்தவே கூடாது. சாப்பிட்ட உணவு உடனடியாக உணவு குடலுக்குள் சென்று விடுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்பட்டு விடும்.

குளித்தல்

  • சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. சாப்பிட்டதும் குளித்தால் கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் உணவு செரிக்கத் தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்துவிடும்.
  • சாப்பிட்டதும் குளித்தால் ஒருவிதமாக நெஞ்சு கரைப்பது போல் இருக்கும். சிலருக்கு உணவு செரிக்கப்படாமல் வாந்தி கூட வர நேரலாம்.

நடத்தல்

  • சாப்பிட்டவுடன் உடனே நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுத்துக் கொள்ளாமல் போய்விடும்.
  • 'சாப்பிட்ட பின்பு நடந்தால் அது செரிமான உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரிமானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகிவிடும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் நல்லது.

தூங்குதல்

  • சாப்பிட்டவுடன் தூங்கவே கூடாது. அப்படி சாப்பிட்டு விட்டு படுக்கச் சென்றால் வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும், நோய்கிருமிகளின் பாதிப்பு வரும்.
  • சாப்பிட்டவுடன் தூங்கினால் உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்