கருணை கிழங்கை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Report Print Nalini in உணவு
431Shares

கருணை கிழங்கு மணல், செம்மண்களில் செழித்து வளரக்கூடியது.

உருண்டை வடிவத்தில் கை விரல்களில் பிடிக்கும் அளவிற்கு இது இருப்பதால் இந்த கிழங்கிற்கு 'பிடி கிழங்கு' என்று மக்கள் அழைக்கிறார்கள்.

இதன் சுவை கொஞ்சம் காரமாகவே இருக்கும். இதனாலும் கூட இவற்றை 'காரும் கருணை' என்றும் சொல்கிறார்கள்.

கருணை கிழங்கு கொஞ்சம் அரிக்கும் தன்மை கொண்டது. அதனுடன் கொஞ்சம் புளி சேர்த்து சாப்பிட்டால் அரிக்கும் தன்மை கட்டுப்படும்.

கருணை கிழங்கை பொரியல், வறுவல், சிப்ஸ் போன்று செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

கருணைக் கிழங்கில் வைட்டமின் 'பி' சத்து அதிகம் நிறைந்துள்ளன.

அடிக்கடி நாம் கருணை கிழங்கை சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். அவற்றை நாம் பார்ப்போம்

  • கருணை கிழங்கு நம் எலும்புகளை உறுதியாக்க பெரிதும் உதவி செய்யும்.
  • கருணை கிழங்கு வயிற்று வலி, இரைச்சல், மந்தம், சொறி, சிரங்கு போன்றவற்றை குணமாக்கும்.
  • கல்லீரல், மண்ணீரல், ஜீரண உறுப்பிற்கு சீரான வலிமை சேர்க்கும். உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்தை குறைக்கும்.
  • மூல நோய் உள்ளவர்கள் கருணை கிழங்கை நன்றாகவே சாப்பிடலாம்.
  • கருணை கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கும்.
  • கருணை கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் பலப்படும்.
  • உடல் எடை குறைய கருணை கிழங்கை சாப்பிடலாம்.
  • பெண்கள் கருணைக் கிழங்கு உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
  • பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்