இலங்கையின் சுவைமிகு லட்டு செய்வது எப்படி தெரியுமா?

Report Print Kavitha in உணவு

ரவா லட்டு, ரவா உருண்டை, பொதுவாக எல்லோர் வீட்டிலும் செய்யும் வழக்கமான இனிப்பு. பண்டிகைகளின் போது இது பிரபலமாக செய்யப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் ரவை லட்டை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பால் மா - 8 தேக்கரண்டி
  • சீனி - 10 தேக்கரண்டி
  • வறுத்த கடலை - 50 கிராம்
  • முந்திரி - 10
  • ரவை - 20 தேக்கரண்டி
  • நெய் - தேவையான அளவு
  • உலர் திராட்சை - 3 தேக்கரண்டி
  • ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

வறுத்த கடலை மற்றும் முந்திரியை மிக்ஸியில் துகள்களாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி ரவையை வறுத்துக்கொள்ளவும்.

பின் பால் மாவை வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். உலர் திராட்சையையும் நெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் வறுத்த ரவையுடன் துகள்களாக அரைத்த வறுத்த கடலை, முந்திரி மற்றும் வறுத்த உலர் திராட்சை,ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து சீனி மற்றும் கரைத்த பால் மாவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.

பின் ரவை கலவை சேர்த்து நன்றாக கலறி இறக்கவும்.கையில் நெய் தடவி உருண்டை பிடித்து சாப்பிட்டால் இலங்கையின் சுவைமிகு லட்டு தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்