ஒரு கப் வேகவைத்த சோளத்தில் எவ்வளவு நன்மை இருக்குன்னு தெரியுமா?

Report Print Nalini in உணவு

தானிய வகைகளில் ஒன்றானது சோளம். சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இயற்கை உணவாகும்..

இது உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும், வாய் நாற்றத்தைப் போக்கும். அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ள சோளம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, செரிமானத்திற்கும் உதவி புரிகிறது.

சம அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டுள்ள மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.

இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனினும் அதிக அளவு பொட்டாசியம் உள்ள உணவுகள் அனைவருக்கும் நல்லது கிடையாது.

சோளத்தில் கலோரி ஒரு மிதமான ஆதாரமாக உள்ளது.ஒரு கப் சோளத்தில் 184 கலோரி உள்ளது.சோளத்தில் உள்ள மாவுச்சத்தின் காரணமாக இதில் அதிக கலோரி உள்ளது.

குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்கள், சிறுநீரக பிரச்சனை உடையவர்கள் எடுக்க கூடாது. மருத்துவரின் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கப் வேகவைத்த சோளத்தில் நன்மைகள்

  • மற்ற காய்கறிகளை போல சோளமும் செல்கள் சேதத்தை எதிர்த்து போராடுமாம். இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியன. கோதுமை,அரிசியை விட சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாகும்.
  • சோளத்தில் கரோடெனாய்டுகள் ,வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-இ உள்ளது.கரோடெனாய்டுகள்இருப்பதால் கண்களுக்கு மிகவும் சிறந்தது.
  • ஒரு கப் வேகவைத்த சோளத்தில் 4 கிராம் நார்சத்து உள்ளது.இதனால் மலச்சிக்கல் ,இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விடுபட முடியும்.14% வைட்டமின்-சி யும்,12% மங்கனீசும் இருக்கிறது.
  • அதிக பழங்கள் மற்றும் காய் சாப்பிடுபவர்களின் எடையை விட அதிக நார்சத்து நிறைந்த சோள உணவு சாப்பிடுபவர்களின் எடை குறைந்துள்ளதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இயற்கை உணவான சோளம் நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுவதால் மனஅழுத்தத்தை தடுக்கும்.
  • மஞ்சள் நிற கர்னல்களை கொண்ட சோளம் குரல்வளைவில் ஏற்படக்கூடிய நோய் அபாயத்தை தவிர்க்கிறது, மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கும்.
  • கர்ப்பிணிபெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் சோளமும் ஒன்று. கர்ப்பிணிபெண்கள் தங்களின் வழக்கமான உணவாக சோளத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்.
  • சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் எதிர்க்க உதவி செய்யும்.
  • சோளமாவாவை அழகு, சமையலுக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தோல் தடித்தல், எரிச்சல் ஏற்படக்கூடிய இடத்தில் பயன்படுத்தினால் தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
  • சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக இருக்கிறது. மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்