தித்திப்பான சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

கேரட்டில் பலவகையான மருத்துவகுணங்கள் கொண்டது என்பது நாம் அறிந்த தகவலே.

கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக இருக்கும். தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

அந்தவகையில் அனைவரும் விரும்பி உண்ணும் கேரட்டை கொண்டு தற்போது அல்வா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • கேரட் - ஒரு கிலோ
  • பால் - அரை லிட்டர்
  • நெய் - 50 கிராம்
  • முந்திரி - 20 முதல் 30
  • சர்க்கரை - 200 கிராம்
  • ஏலக்காய் - 3
  • கிராம்பு - 3
செய்முறை

முதலில் பாலில் நீர் ஊற்றாமல் காய்ச்சி வைக்கவும். மற்ற தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். கேரட்டை மேல் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து துருவிய கேரட்டை மட்டும் சேர்த்து நீர்பதம் வற்ற வதக்கவும். பின் அதில் பால் மற்றும் சீனி சேர்த்து சுருளும் வரை கிளறவும்.

வேறொரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி முந்திரி, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை வறுத்து வைத்துக் கொள்ளவும்.

பால் வற்றியதும் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து நெய் பிரியும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். நெய் பிரிந்து வந்ததும் சுவையான கேரட் அல்வா தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்