மலச்சிக்கலால் தவிப்பவர்களுக்கு சிறந்த பலனைத் தரக்கூடிய 5 ஜுஸ் வகைகள்

Report Print Givitharan Givitharan in உணவு

மலச்சிக்கல் என்பது வயிறு தொடர்பான முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாகும்.

இது சமிபாட்டு அமைப்பில் உள்ள குடலின் செயற்பாடு குறையும்போது ஏற்படுகின்றது.

இதனால் மலமானது கடினத்தன்மை அடைந்து அசௌகரியம் உண்டாகின்றது.

குறைந்தளவு நீர் பருகுதல், நார்சத்தை குறைவாக உள்ளெடுத்தல், உடல் நீண்ட நேரம் அசைவின்றி வைத்திருத்தல் போன்றனவும் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன.

எனவே இப் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்கு ஜுஸ் வகைகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

வட்டுக்கத்தரிக்காய் ஜுஸ் (Prune juice)

மலச்சிக்கலை போக்க மிகவும் சிறந்த ஜுஸாக இது காணப்படுகின்றது. நார்ச்சத்து இதில் அதிகம் காணப்படுவதுடன் விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்தும் இதில் அடங்கியுள்ளது.

அன்னாசி ஜுஸ்

இதில் புறோமெலின் எனும் நொதியம் காணப்படுகின்றது.

இது மலச்சிக்கலை போக்குவதுடன், வயிற்றுப்பிடிப்பு மற்றும் வீக்கங்களையும் இல்லாமல் செய்யக்கூடியது.

எலுமிச்சை ஜுஸ்

மலச்சிக்கல்களை போக்குவதில் மிகச்சிறந்த பங்களிப்பினை இந்த ஜுஸ் ஆற்றுகின்றது.

இது இயற்கையாகவே அமிலத்தன்மை, விட்டமின் சி என்பனவற்றினைக் கொண்டுள்ளது.

அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடியதாகவும், சமிபாட்டு சிக்கலை தவிர்க்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

ஆரேஞ்சு ஜுஸ்

நார்ச்சத்து அதிகம் கொண்ட பழ வகைகளில் ஆரேஞ்சும் ஒன்றாகும்.

எனவே இதில் ஜுஸ் செய்து அருந்துவதனால் குடல் இயக்கத்தை தூண்டக்கூடியதாக இருக்கும்.

அத்துடன் இதில் காணப்படும் பிளேவனோல் எனும் பதார்த்தம் மலச்சிக்கலை போக்கவல்லது.

பேரிக்காய் ஜுஸ்

விட்டமின்கள், நார்ச்சத்து என்பவற்றினை அதிகமாக கொண்டுள்ள இந்த ஜுஸும் மலச்சிக்கலை போக்க சிறந்ததாகும்.

மேலும் சிறு பிள்ளைகளில் ஏற்படக்கூடிய செரிமானப் பிரச்னைகளுக்கு தீர்வாகவும் இதனை கொடுக்கலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்