வெற்றிலையில் காம்பு கிள்ள காரணம் அந்த விபச்சாரியா? புராணமும் அறிவியலும்....

Report Print Abisha in உணவு

வெற்றிலையில், காம்பு கிள்ளி போட்டுவிட்டு இலை மட்டும் சாப்பிடும் வழக்கம் முதியவர்களிடம் பார்க்கலாம். அதற்கு ஒரு புராண கதை உள்ளது. அதற்கான புராண கதையும், அறிவியல் காரணமும் பற்றி பார்க்கலாம்.

புராண கதை

ஒருமுறை தேவலோக அதிபதியான இந்திரன், பூலோகத்தில் அரசர் ஒருவரை காண வருகிறார். அதில், பெரும் மகிழ்ச்சியடைந்த அரசர் பல வகையான விருந்து வைத்து கொண்டாடுகின்றார். அவ்வாறு விருந்து உண்டபின் இந்திரனுக்கு அரசன் வெற்றிலை பாக்கு வழங்குகிறார்.

முதல் முறையாக வெற்றிலை போட பழகிய இந்திரனுக்கு மிகவும் பிடித்துபோய்யுள்ளது.

இந்நிலையில், இந்திரன் தேவலோகத்திற்கு திரும்ப செல்கிறார். அங்கு சென்றபின் உணவுகள் தொடர்ந்து உண்டாலும், ஏதோ ஒரு குறை இருப்பதை உணர்ந்த இந்திரன் வெற்றிலை போட வேண்டும் என்று அசையை அறிந்து அரசனிடம் வெற்றிலை அனுப்பி வைக்க தகவல் கொடுக்கிறார்.

அரசனும் மகிழ்ச்சியுடன் வெற்றிலை கொடுத்தனுப்புகிறார். ஆனால், அது தேவலோகம் சென்றடையும் முன் கருகிவிடுகிறது. அதன் பின் பலரும் வெற்றிலை எடுத்து செல்ல முயற்சிகின்றனர். ஆனால், அனைத்தும் தோல்வி அடைகின்றது.

அரசன், ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார், அதில் தேவலோகத்திற்கு வெற்றிலையை கருகாமல் கொண்டு சேர்பவர்களுக்கு 1000 பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கிறார்.

அதை கேட்டு நாட்டில் உள்ள பெரும் செல்வந்தர்கள், அறிவாளிகள் என்று பலரும் முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்கள் யாராலும், அதை நிறைவேற்ற முடியவில்லை.

அதன்பின் ஒரு விபச்சாரி ஒருவர் வருகிறார், அவர் வந்து தான் இந்த வெற்றிலையை எடுத்து செல்வதாக அரசனிடம் கூறுகிறார். அரசனுக்கு கடும் கோவம் ஏற்பட்டாலும், இவரால் எப்படி சாத்தியம் என்று சித்தித்துக்கொண்டே வெற்றிலை கட்டை வழங்க உத்தரவிடுகிறார்.

அந்த விபச்சாரியும், கருகாத வெற்றிலையை இந்திரனிடம் கொண்டு செல்கிறார். இந்திரனுக்கு ஒரே ஆச்சரியம் எப்படி நிகழ்ந்தது என்று. அவர் விபச்சாரியிடம் கேட்கிறார். அதற்கு பதிலளித்த அந்த பெண், இலையின் அடிப்படை காம்புதான், அதில் ஈரபசை இருந்தால் கருகாது என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு மறுபடியும் எப்படி ஈரப்பசையுடன் கொண்டுவந்தாய் என்று இந்திரன் கேட்க அந்த பெண், தன்னுடைய பெண்ணுறுப்பில் சொருகி ஈரப்பசையுடன் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த இந்திரன், வெற்றிலையை தூக்கி எறிவதா வேண்டாமா என்று ஆலோசனையில் இறங்கியுள்ளார். பின் காம்புகளை உடைத்துவிட்டு அதை உண்டதாக புராண கதை தெரிவிக்கின்றது.

இதை மையப்படுத்தி இன்று வரை யாரும் காம்புடன் வெற்றிலையை சாப்பிடுவதிலை என்றாலும், உண்மையில் இதற்கு அறிவியல் காரணம் உள்ளது.

அறிவியல்

ஒரு இலையின் அழுக்கு பகுதி காம்புதான், அதில் அனைத்து அழுக்கும் சேர்ந்திருக்கும். எனவே அந்த காம்பு பகுதியை சாப்பிட்டால், ஜீரணக்கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுத்துமாம் எனவே அந்த காம்பு பகுதியை நீக்கிவிட்டு சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்