எலும்பு, கண் ஆரோக்கியத்திற்கு உகந்த ஜூஸ் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

உடல் ஆரோக்கியமாக வைத்து கொள்ள ஜூஸ் பலவகையில் உதவி புரிகின்றது.

அந்தவகையில் நமது உடல் உறுப்புகளில் கண் மற்றும் எலும்பு முக்கிய இடம் பெறுகின்றது.

இதனை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வது நமது கடமை ஆகும்.

அந்தவகையில் கேரட், ஆரஞ்சு பழத்தில் செய்யும் ஜூஸ் நமது எலும்புகள் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

தற்போது கேரட் மற்றும் ஆரஞ்சு கொண்டு எப்படி ஆரோக்கியமான ஜூஸை தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கேரட் - 2,
  • ஆரஞ்சு பழம் - 1,
  • எலுமிச்சை - 1 டீஸ்பூன்
செய்முறை

முதலில் கேரட், ஆரஞ்சு பழம், எலுமிச்சை ஆகியவற்றை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.

2 கேரட்டை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே போன்று ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டாக நறுக்கி ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.

கால் கப் தண்ணீரில் இரண்டு ஜூஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு விட்டால் ஜூஸ் தயாராகிவிடும்.

foodnetwork.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்