குளிர் காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா மற்றும் மூக்கடைப்பு போக்க வேண்டுமா? இந்த ரசத்தை குடித்து பாருங்க

Report Print Kavitha in உணவு

கண்டந்திப்பிலி சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்பாட்டில் இருந்துள்ளது.

இது குளிர் காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா, மூக்கடைப்பு, நீரேற்றத்தால் உண்டாகும் தலைவலிக்கு கண்டந்திப்பிலி சிறந்த மருந்தாக கருதப்படுகின்றது.

அந்தவகையில் கண்டந்திப்பிலியில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • புளி தண்ணீர் - 2 கப்,
  • தக்காளி - 1,
  • துவரம்பருப்பு - 1 கப் (வேகவைத்தது),
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
  • உப்பு - தேவையான அளவு,
  • கொத்தமல்லி இலை - சிறிது.
  • கண்டந்திப்பிலி - 5 துண்டு,
  • சிவப்பு மிளகாய் - 2,
  • மிளகு - 1/2 டீஸ்பூன்,
  • பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
  • தேங்காய்த் துருவல் - 1/2 டீஸ்பூன்.
  • நெய் - 1/2 டீஸ்பூன்,
  • கடுகு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை

தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நெய்யில் வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

புளி தண்ணீர், தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

புளி பச்சை வாசனை போன பின் அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நுரை வந்தவுடன் இறக்கவும்.

பின்பு நெய்யில் கடுகு தாளித்து ரசத்தில் கொட்டவும். கடைசியாக மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்