நவதானிய சூப் செய்வது எப்படி ?

Report Print Abisha in உணவு

நவதானியம் எப்போதும் ஆரோக்கியமானவையே. அவைதான் உடலுக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் நவதானியத்தை சூப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,

வெங்காயம் - ஒன்று,

பூண்டு - 2 பல்,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்,

மிளகு - காரத்துக்கேற்ப,

கொத்தமல்லி தழை - தேவையான அளவு,

எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

தேங்காய்ப் பால் - ஒரு கப்,

புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • முளைகட்டிய பயறுகளை தனியாக வேக வைக்கவும்.
  • மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.
  • பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers