இடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள வேண்டுமா? இந்த உணவுமுறைகளை கடைபிடித்து வந்தாலே போதும்!

Report Print Kavitha in உணவு

பொதுவாக எல்லா பெண்களுக்கு இடுப்பை 'சிக்’ கென்று என்று வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்

ஆனால் குண்டாக இருக்கும் பெண்கள் மிகவும் அவதிப்படுவது இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை கரைப்பதற்காக தான்.

இதற்கு நாள் முழுவது டயட் இருக்க வேண்டிய அவசியமில்லை இடுப்பை 'சிக்’கென்று வைத்துக் கொள்ள இயற்கை உணவுகள் பெரிதும் உதவுகின்றது.

கீழ் கொடுக்கப்பட்ட இயற்கை உணவுகளை உட்கொண்டாலே போதும். விரைவில் நல்ல பலனை காணலாம்.

தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
  • பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.
  • நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.
  • எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனிக்கு பதிலாக அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.
  • சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.
  • தினமும் உணவில் 2 டீஸ்பூன் 'கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.
  • டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.
  • தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும்.
  • எப்போதும் உணவை மென்று சாப்பிடவும்.
  • சோடா கலந்த குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்கவும். வாயுத் தொல்லை அதிகமானால் இடுப்பு எடையும் அதிகமாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers