உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் பார்லி கஞ்சி செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

பார்லி,ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக விளங்குகின்றது.

இது நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் அனைவரும் சாப்பிடலாம்.

அந்தவகையில் தற்போது இந்த பார்லி கஞ்சியை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பார்லி அரிசி - ஒரு கப்
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை

பார்லி அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும்.

ஆறிய பிறகு மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்து கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் பார்லி சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

பார்லி அரிசி கஞ்சி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அனைவருக்கும் பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்