நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜவ்வரிசி கூழ் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

உடல் நலகுறைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (increase immunity) குறைவின் காரணமாகவே இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே இதை நாம் சரி செய்ய முறையான உணவு முறைகளை பின்பற்றினாலே நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியம் காக்கும் கூழ் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து பருகலாம்.

அந்தவகையில் தற்போது ஜவ்வரிசி கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • ஜவ்வரிசி - அரை கப்
  • பச்சை மிளகாய் - 4
  • பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • தண்ணீர் - 1 கப்
செய்முறை

ஜவ்வரிசியை கழுவி இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

ப.மிளகாய், உப்புடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அது கொதிக்க தொடங்கியதும் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

பச்சை வாசம் நீங்கியதும் ஜவ்வரிசியை கொட்டி சிறு தீயில் கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து ருசிக்கலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers