சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

உயிரை பறிக்கும் கொடூர நோய்களுள் புற்றுநோய்க்கு அடுத்து சக்கரை நோயும் முதலிடத்தில் அடங்குகின்றது.

இன்று 30 வயதை தாண்டியவர்கள் பெரிதும் சக்கரை நோயாலே பாதிக்கப்படுகின்றனர்.

அந்தவகையில் சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா உகந்தது.

தற்போது இந்த உணவை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
  • கோதுமை மாவு - அரை கப்
  • ராகி மாவு - அரை கப்
  • உப்பு - தேவையான அளவு
  • உருளைக்கிழங்கு - 1
  • கரம் மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • ஒமம் - கால் ஸ்பூன்
செய்முறை

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும்.

மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து பரோட்டாவை சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்