அன்றாட உணவில் அதிக சர்க்கரை சேர்ப்பதனால் என்ன விளைவு ஏற்படும் தெரியுமா?

Report Print Kavitha in உணவு

உலகிலேயே மிக ஆபத்தான உணவாக சர்க்கரை இருக்கின்றது.

இது அதிகளவு உட்கொள்ளுவதனால் பல நோய்களை உடலுக்கு ஏற்படுத்திவிடுகின்றது.

அந்தவகையில் சர்க்கரை அதிகளவு உட்கொள்ளுவதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி இங்கு பார்ப்போம்.

  • சக்கரை ரத்த அழுத்தத்தினைக் கூட்டும். தொடர் உள் வீக்கத்தினை உருவாக்கும். இவை இரண்டும் சேர்ந்து இருதய நோயினை உருவாக்கும்.
  • சக்கரை உணவுக் குழாயில் புற்றுநோயினை உருவாக்கும். நுரையீரல் புற்றுநோய், சிறுகுடல் புற்றுநோய் சர்க்கரைப்பை புற்று நோய் என அனைத்தினையும் உருவாக்கும்.
  • கல்லீரலுக்கு அதிக கனத்தினைக் கொடுத்து கொளுப்பு கல்லீரலாக்கும் தன்மையினை இந்த உணவு கொண்டது.
  • சர்க்கரை சிறுநீரகம், கவுட் மற்றும் மறதி நோய்களை உருவாக்கும்.
  • 20 சதவீத சக்தியினை இந்த உணவில் இருந்து நீங்கள் பெற்றால் 25 சதவீதம் கூடுதலாக இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.
  • சர்க்கரை நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைத்து கிருமி, நோய் தாக்குதல்களை எளிதில் வரவழைக்கும்.
  • சர்க்கரை சருமத்தில் முதுமையைக் கூட்டும்.
  • ஈறுகள் நோய், மன உளைச்சல், தலைவலி, சோர்வு, கவனம் செலுத்த இயலாமை, டென்ஷன், கோபம் இவற்றினை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த உணவு வைட்டமின்கள் ஏ.சி.பி.12 மற்றும் கால்சியம் இவை இருக்க வேண்டிய இடத்தினை ஆக்கிரமித்து விடுகின்றது.
  • சர்க்கரை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது வாதம், இருதய நோய், சர்க்கரை நோய், உடல் எடை என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்