வயிற்று புண்ணை குணமாக்கும் தேங்காய்ப்பால் கஞ்சி செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு
316Shares

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே வயிற்றுப்புண் எனப்படுகின்றது.

இதிலிருந்து எளிதில் விடுபட தேங்காய்ப்பால் கஞ்சி பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது இதனை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
 • பச்சரிசி - கால் கிலோ
 • பாசி பருப்பு - 50 கிராம்
 • வெந்தயம் - 2 டீஸ்பூன்
 • பூண்டு - 6 பல்
 • பெ.வெங்காயம் - 2
 • சோம்பு - 1 டீஸ்பூன்
 • பட்டை - சிறிதளவு
 • தேங்காய்த் துருவல் - கால் கப்
 • பச்சை மிளகாய் - 2
 • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 • புதினா - சிறிதளவு
 • தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
 • உப்பு - தேவைக்கு
செய்முறை

கொத்தமல்லி, பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சரிசி, பாசிபருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.

பூண்டுவை லேசாக இடித்துக்கொள்ளவும்.

தேங்காய் துருவலை மிக்சியில் கொட்டி அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் மிளகாய், வெங்காயம், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரிசி, உப்பு, பாசி பருப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேகவிடவும்.

வெந்ததும் இறக்கி ஆறியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறிவிடவும்.

அதனுடன் புதினா, கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்