மூட்டு வலிக்கு தீர்வு தரும் முடக்கத்தான் சட்னி செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

முடக்கத்தான் கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும்.

அதுமட்டுமின்றி முடக்கத்தான் கீரை பல மருத்துவகுணங்கள் அடங்கியே ஒரு அற்புதமான கீரை ஆகும்.

கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது என்பதாலேயே, முடக்கறுத்தான் எனப் பெயர் வந்தது.

அந்தவகையில் மூட்டுவலியை போக்கும் இந்த கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
 • முடக்கத்தான் கீரை - 1 கட்டு
 • நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கப்
 • தயிர் - ½ கப்
 • சின்னவெங்காயம் - 8
 • நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
 • கடுகு - ½ ஸ்பூன்
 • உளுந்து பருப்பு - 2 ஸ்பூன்
 • கடலைபருப்பு - 2 ஸ்பூன்
 • பச்சை மிளகாய் - 3
 • புளி கரைசல் - 1 ஸ்பூன்
 • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை

முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு லேசாக வதக்கி இறக்கவும்.

பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அதனுடன் வல்லாரை கீரையையும், கொத்தமல்லி, புளி கரைசலையும் சேர்த்து அரைக்கவும்.

இஞ்சி, தயிர், உப்பு போன்றவைகளை அத்துடன் சேர்த்து அரைத்து கலந்து சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்