சுவையான நாவூரும் நாட்டுக்கோழி ரசம் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

பொதுவாக எல்லோருக்கும் நாட்டுகோழியில் சமையல் என்றாலே பிடிக்கும்.

அதிலும் நாட்டுகோழி கறி, நாட்டுக்கோழி ரசம், நாட்டுக்கோழி சூப், போன்றவை அதிகம் விரும்பி சாப்பிடுவார்.

தற்போது நாம் சுவையான நாவூரும் நாட்டுக்கோழி ரசத்தினை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
 • நாட்டு கோழி - ஒரு கிலோ
 • சின்ன வெங்காயம் - 30 வெங்காயம்
 • சீரகம் - 2 ஸ்பூன்
 • மிளகு - 4 ஸ்பூன்
 • பச்சை மிளகாய் - 2
 • தக்காளி - 4
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 ஸ்பூன்
 • பட்டை - தலா 2
 • இலவங்கம் - தலா 2
 • மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
 • தனியாத்தூள் - 2 ஸ்பூன்
 • மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்
 • கருவேப்பிலை - தேவையான அளவு
 • மல்லி இலை - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

முதலில் மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

அதனுடன் பொடித்த மிளகு , சீரகம் , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கும் வரை வேக விடவும்.

இறக்கி வைத்து கருவேப்பிலை , மல்லி இலை தூவி பரிமாறவும்.

சிக்கன் ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்