சத்தான ஸ்நாக்ஸ் செய்ய நீங்க ரெடியா…?

Report Print Abisha in உணவு

சுவைமிக்க சத்தான உணவுகளில் ஒன்று கருப்பு கொண்டைக்கடலை அதை எளிதில் விரும்பியபடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையானவை
  • கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்
  • உப்பு - போதிய அளவு
  • மிளகாய் தூள் – 1டீஸ்பூன்

ஓர் அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் உப்பை போட்டு நன்றாக சூடானதும் கருப்பு கொண்டைக்கடலையை போட்டு நன்றாக வறுக்கவும். 8 முதல் 10 நிமிடங்கள் வரை வறுத்தபின் அதனுடன் மிளகாய் தூளை சேர்க்கவும், கடலையில் சிறிது பிளவு ஏற்படும். பின், சிறு நெருப்பில் தொடர்ந்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை வறுத்து எடுக்கவும். பின் ஆறவைக்கவும். ஆறிய பின் கலந்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம். இதை நமக்கு தேவையான நேரத்தில் சுவைக்கலாம். உடலுக்கு தீங்கு ஏதும் விளைவிக்காத சிறந்த ஸ்நாக்ஸ்

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்