அருமையான கத்தரிக்காய் பிரை தயாரிப்பது எப்படி...?

Report Print Abisha in உணவு

கத்திரிக்காய் பெரும்பாலனோர் விரும்புவதில்லை. ஆனால் அதை விரும்பியபடி செய்ய வேண்டும் என்றால் பிரை செய்வது சிறந்தது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

தேவையானவை
  • கத்தரிக்காய் - 1/4 கிலோ
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
  • மிளகு தூள் - அரை டீஸ்பூன்
  • உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு,
  • கடுகு - தாளிக்க.
செய்முறை

கத்தரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் அல்லது வட்டவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

கத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை மிதமான நெருப்பில் வதக்கவும்.

வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்