ஆரோக்கியமான வெந்தயக்கீரை பிரியாணி எப்படி செய்வது...?

Report Print Abisha in உணவு

வெந்தையக்கீரையின் நலன் பற்றி அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை அனைவரும் விரும்பும் பிரியாணியாக மாற்றும் வழிமுறையை தற்போது பார்க்கலாம்.

தேவையானவை
 • வெந்தயக்கீரை - 1,
 • பிரியாணி அரிசி - 1/2 கிலோ,
 • தேங்காய்ப்பால் - 1 கப்,
 • சின்ன வெங்காயம் - 10,
 • தக்காளி - 2,
 • கறிவேப்பிலை - 10,
 • தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
 • கிராம்பு, ஏலக்காய், பட்டை - தலா 2,
 • பூண்டு - 10,
 • வரமிளகாய் - 2,
 • கொத்தமல்லி பவுடர் - 1½ டீஸ்பூன்
செய்முறை

வெந்தயக்கீரையை முதலில் நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

தொடர்ந்து பூண்டு, வரமிளகாய், தனியா தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

மேலும் தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை சிறுதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் வெந்தய கீரையை போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்.

குக்கரில் நெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் வதக்கிய வெந்தயக்கீரை, அரிசி சேர்த்து தேவையான அளவு தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும். .

இப்போது சூப்பரான கமகமக்கும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை பிரியாணி தயார்.

இதனுடன் பிரியாணிக்கு செய்யும் சைடிஷ் வைத்து பரிமாறலாம்

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்