எக் ஃபிங்கர்ஸ் சூப்பரான ஸ்நாக்ஸ் தயார் செய்வது எப்படி

Report Print Abisha in உணவு

மாலை வேளையில் அனைவரும் விரும்பு வகையில் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி... இதில் உங்களுக்கு ஒரு டிப்ஸ்

தேவையான பொருட்கள்
  1. முட்டை - 3
  2. சோள மாவு - கால் கப்
  3. மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
  4. கரம் மசாலா தூள் – டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
  7. தயிர் - 3 டீஸ்பூன்
  8. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
  9. உப்பு – சுவைக்கு

செய்முறை :ஒரு பாத்திரத்தில் 3 முட்டைகளையும் உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பாத்திரத்தின்கீழ் பகுதி சமமாக இருக்கும் பாத்திரத்தில் இந்த முட்டை கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.வெந்ததும் அதை உங்களுக்கு தேவையான அளவுகளில்,நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் சோள மாவு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.மசாலா கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள மசாலாவில் வெட்டி வைத்துள் முட்டை துண்டுகளை மசாலாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

தற்போது சுவைத்து பாருங்கள்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்