இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்

Report Print Jayapradha in உணவு

ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால்அது பல்வேறு தீவிர உடல்நிலை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும்.

இத்தகைய ரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் தினமும் நாம் சாப்பிடும் ஒரு சில உணவுகள் தான்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கை உண்டாக்கும் உணவுகளான சிப்ஸ், ஊறுகாய், வேர்க்கடலை, பாப்கார்ன், உறைய வைக்கப்பட்ட கலவைகள், கெட்சப், ட்ரெசிங், சூப் மிக்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

காபி

காபியில் உள்ள காப்ஃபைன் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் அடினோசைன் என்னும் ஹார்மோன் முடக்கப்படும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே காபியை அதிகமாக குடிக்காதீர்கள்.

கொழுப்பு நிறைந்த உணவுகள்

கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை உட்கொள்வது இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால் இதை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

சர்க்கரை

அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொண்டால் அவை இரத்த குழாய்களில் கொழுப்புக்களைப் படிய வைத்து இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புக்கள் அதிகரித்தால் அது உடல் பருமனை அதிகரிக்கும்.

பிட்சா

ஒரு அல்லது 2 துண்டு பிட்சாவில் 1,000 மிகி சோடியம் உள்ளது. பிட்சா கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் ப்ளேவர்கள் மற்றும் இதர உட்பொருட்கள், உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியவை.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது.உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இந்த மாட்டிறைச்சியை ஒரு துண்டு சாப்பிட்டாலே, அது அவர்களது உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படும்திவிடும்.

நூடுல்ஸ்

ஒரு பாக்கெட் நூடுல்ஸில் கொழுப்பு 14 கிராமும், சோடியம் 1,580 மில்லிகிராமும் உள்ளது. எனவே அதிகமாக இதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஆல்கஹால்

ஒரு நேரத்தில் 3 டம்ளருக்கு அதிகமாக ஆல்கஹாலை அருந்தினால் அது இரத்த அழுத்த அளவை மிக அதிகமாக உயர்த்தி விடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்