உடலில் இரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழங்கள்

Report Print Jayapradha in உணவு

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது மற்றும் உடலில் ரத்தத்தை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என பார்ப்போம்.

பேரீச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த சோகை மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் கிடைக்கும்.

அத்திப்பழம்

தினமும் இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.

இலந்தைப் பழம்

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும், பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

நாவல் பழம்

நாவல் பழத்தின் சுவையை போலவே அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும்.

நெல்லிக்காய்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

முருங்கைக் கீரை

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது.தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்