என்றும் 16 வயது போல தோற்றம் அளிக்க! இதெல்லாம் சாப்பிடுங்க

Report Print Jayapradha in உணவு

இன்றும் பலரது மனதிலும் துளிர் விட்டு இருக்கும் ஆசை ஒன்று எப்பொழுதும் இளமையுடனும் மற்றும் அழகுடனும் இருக்க வேண்டும் என்பது தான்.

அத்தகைய இளமையை எப்போதும் தக்க வைத்து கொள்ள உதவும் சில முக்கிய உணவு பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தக்காளி

தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிகம் உள்ளதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்து சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

மீன்

மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிக அளவு உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுங்கள். மேலும் இவை கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள், காய்கறிகளில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும் மற்றும் நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டிருக்கும்.

கீரைகள்

பசலைக்கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்களால் சருமம் மட்டுமின்றி உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பெர்ரிப் பழங்கள்

சிட்ரஸ் பழ வகையை சார்ந்த பெர்ரிப் பழங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி இவை உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தை வழங்கி, முதுமையைத் தள்ளிப் போடும்.

ப்ராக்கோலி

தினமும் ப்ராக்கோலியை பச்சையாக அல்லது ஜூஸ் போட்டு குடித்தால் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

முள்ளங்கி

முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இவற்றை தினமும் உட்கொண்டு வந்தாலும், முதுமையைத் தள்ளிப் போடலாம்.

தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்

தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் ஆகிய இரண்டிலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்