ஆண்களே உஷார்! இனிமேல் இதையெல்லாம் சாப்பிடவே சாப்பிடாதீங்க!

Report Print Jayapradha in உணவு

உலக அளவில் 20 முதல் 30 சதவிகித ஆண்கள் இந்த விந்தணு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விந்தணு குறைபாடு ஏற்படவும் முதன்மையான காரணிகள் பரம்பரை ரீதியாக ஹார்மோன்களின் குறைபாடு, உட்கொள்ளும் உணவின் தன்மை, கதிர்வீச்சு, பிறப்புறுப்புகளில் தொற்றுகள், பருவமடைதலில் பிரச்சினைகளே ஆகும்.

இத்தகைய விந்தணு குறைபாட்டில் இருந்து முற்றிலும் விடுபட ஆண்கள் காட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இறைச்சி, மீன், அவற்றால் தயாரித்த பண்டங்கள் அதிக நாள் கடைகளில் பதப்படுத்தி விற்கின்றனர். இதை சாப்பிட்டால் விந்தணுவின் எண்ணிக்கையை குறைத்து விடும்.

வேதி காய்கறிகள் மற்றும் பழங்கள்

அதிக பூச்சிக்கொல்லிகள், ராசயனங்கள் கலந்த வேதி காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி விந்தணுக்களை அழிக்கிறது. எனவே இயற்கை முறையில் பயிர்செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களையே உண்ணுங்கள்.

பால்

பால் என்றால் அனைவருக்கும் அதிக பிரியம்தான். மேலும் கொழுப்புக்கள் நீக்கப்படாத பால், வெண்ணெய், பாலாடை கட்டி போன்றவற்றில் நிறையுறாத கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை விந்தணுவின் செயல்பாட்டை முழுமையாக குறைத்து விடுகிறதாம்.

இனிப்பு

சர்க்கரையை உணவில் அதிகம் எடுத்து கொண்டாலே அது உடலின் நலனை கெடுக்கும்.

செயற்கை முறையில் உருவான குளிர்பானங்கள், எனர்ஜி பானங்கள் போன்றவை சர்க்கரையின் அளவை உடலில் உயர்த்தும். இதனால் உடலின் ஆரோக்கியம் சீர்கேடு அடையும்.

காஃபி

அதிகமாக காஃபி அருந்துவதால் உற்பத்தி செல்களை பாதிக்க செய்கிறது. இதனால், விந்தணுக்கள் உற்பத்தி குறைந்து விடும். எனவே ஒரு நாளைக்கு 2 கப் காஃபியே போதுமானது.

மெர்குரி மீன்கள்

கடலில் மெர்குரியின் அளவு அதிகரித்து கொண்டே இருப்பதால் கடல் உணவுகள் உடலுக்கு நல்லது என்ற வார்த்தை இப்போது முற்றிலுமாக மாறி வருகின்றது.

மேலும் அதிகமாக கடல் உணவுகளை உண்ணும் ஆண்களுக்கு விந்து உற்பத்தி தடை பெரும். அத்துடன் உடல் ஆரோக்கியமும் கெடும்.

புகை மற்றும் மது பழக்கம்

புகை பழக்கம் விந்தணுவை முற்றிலுமாக அழிக்க கூடிய ஒன்றாகும். பெரும்பாலான ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட இதுதான் முதன்மை காரணமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்