இந்த ஒரு பழம் சாப்பிட்டால் போதும் உங்க தொப்பையை குறைக்கலாமா?

Report Print Jayapradha in உணவு

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான ஒன்று அன்னாசி.

மேலும் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும்.

மேலும் 100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது.

அன்னாச்சி பழத்தின் மருத்துவ குணங்கள்

 • அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
 • இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
 • மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கி உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
 • உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம். மேலும் இது சோர்வின்றி செயல்பட பெரிதும் உதவுகின்றது.
 • புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது.
 • அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
 • அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு அமிலம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.

தொப்பையை குறைக்க அன்னாச்சியை பயன்படுத்தும் முறை

தேவையானவை

 • அன்னாசிப்பழம்- 1
 • ஓமம்- 4 தேக்கரண்டி
 • தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை

 • அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி பின்பு நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டு இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
 • இந்த முறைப்படி 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை விரைவில் கரைய ஆரம்பித்து பின் மெலிதான உடலைப் பெறலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்