இந்த ஒரு சிவப்பு பழம் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாமா?

Report Print Jayapradha in உணவு

இன்று பலரும் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர், இதற்காக டயட், உடற்பயிற்சி என பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் வீட்டிலேயே இருக்கும் பொருளை கொண்டு உடல் எடையை குறைக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

ஆம், தக்காளியை தினசரி சரியான உணவு இடைவேளையில் அல்லது உணவாகவே உட்கொண்டு வந்தால், அது உடல் எடையை மிக விரைவாக குறைக்க உதவும்.

தக்காளி

முதலில் உடல் எடையை குறைக்க நாம் உண்ணும் உணவு நார்ச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். தக்காளி அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு. எனவே இதனை தினமும் உண்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையும். தக்காளி நீர்ச்சத்து நிறைந்த ஒரு உணவு. மேலும் இது உடலின் கெட்ட கொழுப்புக்கள் உடனடியாக கரைக்க உதவுகிறது

உணவுகளில் கலோரி குறைந்த உணவுகளை உண்டாலே விரைவில் உடல் எடையை குறைத்து விடலாம். ஒரு தக்காளியில் 16 கலோரிகள் மட்டுமே உள்ளன. இரண்டு தக்காளிகளை உண்டால் கூட 32 கலோரிகள் அதாவது ஐம்பதிற்கும் குறைவான கலோரிகள் மட்டுமே உடலில் தோன்றும்.

தக்காளியின் நன்மைகள்
  • தக்காளி தினமும் உட்கொள்வதினால் உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்கி உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைக்கவும்.
  • உடலில் அடிக்கடி தோன்றும் சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படாமல் இருக்க தக்காளி உதவுகின்றது..
  • உடலில் நோய்கிருமிகள் ஏற்படாமல் இருக்க தேவைப்படும் ஆன்டி ஆக்சிடண்டுகளை உடலிற்கு அதிக அளவு தருகிறது.
  • உடற்செயலிய மாற்றத்தை ஒழுங்கு படுத்துதல் மற்றும் உடலின் கிளைகெமிக் அளவினை குறைவாகவே இருக்க வைக்கும்.
உடல் எடையை குறைக்க எப்படி உண்ண வேண்டும்?
  • ஒரு தக்காளியை எடுத்து அதனை சாறாகவோ அல்லது சாலட்டாகவோ மாற்றி தினமும் உட்கொள்ளலாம்.
  • தக்காளியைக் கொண்டு பழச்சாறு அல்லது ஸ்மூத்தி போன்ற பருகும் பான வகைகளை தயாரித்து உட்கொள்ளலாம்.
  • அனைத்துக் காய்கறிகள் அல்லது பழங்கள் உடன் தாக்காளியை சாலட் வடிவில் சேர்த்து உட்கொள்ளலாம்.
  • தக்காளியை சுண்டல், காளான், கேரட், பட்டாணி, பச்சை பட்டாணி போன்ற சைவ காய்கறி மற்றும் பயறு வகைகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம். மேலும் இதனை கிரில்டு சிக்கன், மீன், தக்காளி என்ற அசைவ வடிவாகவும் இதனை உண்ணலாம்.
  • தக்காளி சூப்பினை மதிய மற்றும் இரவு வேளைகளில் உட்கொள்ளலாம். தக்காளி ஜூஸ் மற்றும் வெள்ளரி சான்டவிச் என்ற காம்பினேஷனில் அமைந்த உணவும் உடல் எடையை விரைவாக குறைக்க உதவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்