இந்த ஒரு காயை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

Report Print Kabilan in உணவு

சாம்பாரில் பிரதானமான இடம் பிடிக்கும் காயான கத்திரிக்காயில், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளும் அடங்கியுள்ளன.

கத்திரிக்காய்

கத்திரிக்காயில் கரும் ஊதா, வெள்ளை, சிவப்பும் ஊதாவும் கலந்த நிறம் என பல வகைகள் உள்ளன. அதே போல் இவற்றின் சுவைகளில் மாறுபாடு இருக்கும்.

ஊட்டச்சத்துக்கள்

கத்திரிக்காயில் புரதம், நார்ச்சத்து, கார்போ சத்துகள், குறிப்பிட்ட அளவு கனிமங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

சிலருக்கு கத்திரிக்காயினால் சருமம், வாய் போன்ற இடங்களில் ஒவ்வாமை ஏற்பட்டாலும், கத்திரிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

உணவு நார்ச்சத்து

குடல் இயக்கங்கள் சிறப்பாக செயலாற்ற தேவையான நார்ச்சத்து கத்திரிக்காயில் உள்ளது. இதன்மூலம், செரிமான பாதை பாதுகாக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் எளிதாக்கப்படும். தொடர்ந்து, கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடல் புற்றுநோய் அபாயம் தவிர்க்கப்படும்.

உடல் எடை கட்டுப்பாடு

சில வகை உணவுகளில் ஊட்டச்சத்துகள் பெருமளவில் உள்ளன. எனினும், அதிகளவு கலோரிகளை கொண்டிருக்கும். ஆனால் கத்திரிக்காய், குறைந்த அளவு கலோரிகள் கொண்ட அதிக ஊட்டச்சத்து மிக்கதாகும்.

எனவே, உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள ஒரு கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து க்ஹ்ரேலின் எனும் ஒரு ஹார்மோன் சுரப்பை நிறுத்தும்.

இதனால், வயிற்றுக்கு தேவையில்லாத நேரத்தில் உணவு வேண்டும் என்கிற உணர்வு குறையும். எனவே, கடின உடற்பயிற்சிகள் எதுவும் செய்யாமலேயே கத்திரிக்காயின் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.

ரத்த ஓட்டம் அதிகரிப்பு

கத்திரிக்காயில் தாவர ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இதனால் மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். எனவே, கத்திரிக்காயை நன்றாக வேக வைத்து உட்கொண்டால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதய ஆரோக்கியம்

கத்திரிக்காய் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். அத்துடன் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கத்திரிக்காய், மன அழுத்தத்தையும் போக்கும்.

மேலும், இதயத்திற்கு தேவையான குறைந்த அளவு கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்களை கத்திரிக்காய் கொண்டிருப்பதால், இதய ஆரோக்கியம் மேம்படும்.

கத்திரிக்காயானது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். இதில் உள்ள பயோ ப்லவனைடுகள், ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் இதயத்தில் அழுத்தம் மற்றும் வலியை குறைக்க உதவும்.

ரத்தத்திற்கு நன்மை

ரத்த நாளங்களை வலிமையடையச் செய்ய வைட்டமின் கே, பயோ ப்லவனைடுகள், இரும்புச்சத்து ஆகியவை தேவை. இவை இருந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

எனவே, கத்திரிக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் உறைவது தடுக்கப்படும். அத்துடன் ரத்த சோகையின் ஆரம்பகட்ட அறிகுறிகளான சோர்வு, தலைவலி, ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் போன்றவை உண்டாகாமல் தடுக்கப்படும்.

கத்திரிக்காயில் தாமிரம் அதிகம் இருப்பதால், இது இரும்பு சத்தோடு இணைந்து உடல் செயல்பாடுகளுக்கு தேவையான சிவப்பு ரத்த அணுக்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.

சிவப்பு ரத்த அணுக்களின் மூலம் உடலில் ஆற்றலை அதிகரிக்க முடியும். இதனால் சோர்வு, அழுத்தம் போன்ற உடல் பாதிப்புகளைப் போக்க முடியும்.

புற்றுநோய்

கத்திரிக்காயில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடெண்ட் இருப்பதால், இவை பல்வேறு நோய்களுக்கு தடுப்பு சுவர் போல் செயல்படுகின்றன. உடலின் சிறந்த நோயெதிர்ப்பு தன்மைக்கு வெள்ளை ரத்த அணுக்கள் காரணமாக இருக்கின்றன.

கத்திரிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. எனவே, இவை ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கத்திரிக்காயில் நசுனின் மற்றும் க்லோரோஜெனிக் ஆகிய இரண்டு இயற்கை ஆண்டி ஆக்சிடெண்ட்கள் உள்ளன.

இவை உடலில் தீமை தரும் கூறுகளை எதிர்த்தும் போராடும். குறிப்பாக, உடலில் புற்றுநோயை உருவாக்க காரணமான அணுக்களை கத்திரிக்காய் அழிக்கும். இதனால் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கப்படும்.

வலிமையான எலும்புகள்

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கத்திரிக்காய் உதவுகிறது. இதில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் எலும்பு வலிமைக்கு உதவும். மேலும், கத்திரிக்காயில் உள்ள பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்