கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமா? இதனை சாப்பிடுங்க

Report Print Kabilan in உணவு

மது அருந்துதல் பழக்கம் இல்லாதவர்களையும் Non-Alcoholic Fatty Liver Disease எனும் நோய் எளிதில் தாக்கும்.

இந்த நோயின் பாதிப்பால் கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படும். எனவே இதனை தவிர்க்க உணவு முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

கொழுப்பு

கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும். அதற்காக இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். எளிய முறையில் எடை குறைப்பை செய்தால், கல்லீரல் சேதமடைவதையும் தடுக்கலாம்.

காய்கறிகள்

கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பச்சை காய்கறிகளை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும் காரணத்தால் காய்கறிகளை எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

எனினும், மருத்துவரின் பரிந்துரைப்படி தினமும் இரண்டு துண்டு ஏதேனும் பழத்தை உண்டு வரலாம்.

புரத உணவுகள்

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கோழி இறைச்சி, பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் கடல் உணவுகள், விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிற்றுண்டிகள்

உணவு இடைவெளியின் போது சில வகை சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்ளலாம். உறைந்த பெர்ரி பழங்கள், தேங்காய் பால் அல்லது பாதாம் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்மூதி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் பலவகை விதைகள் மற்றும் பருப்புகள், கேரட், வெள்ளரிக்காய், செலெரி, ப்ரோகோலி போன்றவற்றை சாப்பிடலாம். அத்துடன் பச்சை காய்கறி ஜூஸ் ஒரு தம்ளர் அளவு பருகலாம்.

தவிர்க்க வேண்டியவை
  • மாவுச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வதுடன், உருளைக்கிழங்கை மட்டும் தவிர்ப்பது நல்லது.
  • சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், இனிப்புகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை தவிர்க்க வேண்டும்.
  • எடை குறைப்பை பரிந்துரைக்கும் உணவு முறை, பொரித்த உணவுகள், பீட்சா, சிப்ஸ் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்