கருணாநிதியின் உறுதியான உடலின் ரகசியம் என்ன? அவர் சாப்பிடும் உணவுகள் இதுதானாம்

Report Print Deepthi Deepthi in உணவு

தமிழக அரசியல் தலைவர்களிலேயே பிட்டான தலைவராக இருந்தவர் கருணாநிதி.

45 வயதில் அவர் முதல்வராகும் வரை, பெரிதாக நடைபயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்தது இல்லை. இருந்தும் அவரது உறுதியான உடல் அமைப்புக்கு காரணம், ஆரம்ப காலத்தில் அவரது மிகக் கடுமையான உழைப்பு.

45 வயதில் நடைபயிற்சி ஆரம்பித்த கருணாநிதி 30 ஆண்டு காலம் இடைவிடாமல் அதைத் தொடர்ந்தார். புகழ்பெற்ற யோகா ஆசிரியர் கிருஷ்ணமாச்சாரியாரிடம் யோகா கற்றார்.

சூரிய நமஸ்காரம் போன்ற யோகாசனங்களை செய்வார். மூட்டு வலி தான் அவருக்கு எதிரி. 2006 காலகட்டத்தில் அவரது எடை கூடியது. இதனால், மூட்டுகள் உடம்பை தாங்கும் சக்தியை இழந்துவிட்டதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

நடப்பது குறைந்துவிட்டதால், வாரம் ஒருமுறை கை,கால்களுக்கு ஆயில் மசாஜ் செய்கிறார்கள். பயிற்சி முடிந்தவுடன் கொஞ்சம் ஏலக்காய் டீ அருந்துவார். காலை உணவாக 2 இட்லி எடுத்துக் கொள்கிறார். காலை 11 மணிக்கு எனர்ஜிக்காக கொஞ்சம் பிஸ்கெட்,ஒரு கிளாஸ் ஜூஸ்.

மதியம் சிறிதளவு உணவில் நிச்சயம் கீரை இருக்கும். அடிக்கடி மால்டோவா, போன்விட்டா போன்ற பானங்கள் எடுத்துக் கொள்வார். எந்த சாதமாக இருந்தாலும் அதை மிக்ஸியில் போட்டு திரவமாக்கிச் சாப்பிடுவது கருணாநிதியின் வழக்கம் .

ஆரம்பத்தில் மாமிச உணவுகளைச் சாப்பிட்டபோது விறால் மீனை மிகவும் அதிகம் விரும்பிச் சாப்பிட்டுள்ளார். பிறகு, முதுமைக்கும், காலநிலைக்கும் ஏற்றவாறு உணவை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக சிறுநீர் தொற்று மற்றும் உணவுக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நீர் உணவுகள் அவருக்கு இரைப்பையில் நேரடியாக செல்லும் வகையில் வயிற்றில் துளையிடப்பட்டு குழாய் பொருத்தப்பட்டது.

அதன் வழியாக தான் உணவுகள் செலுத்தப்பட்டது. அவர் வாய் வழியாக கடந்த ஆண்டாக உணவுகளை எடுத்துக்கொள்ளவில்லை.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்