நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Report Print Printha in உணவு

ஒவ்வொரு மனிதனுக்கும் நீண்ட நாட்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.

இதற்கு சீரான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது.

நொறுக்குத்தீனிகள், துரித உணவுகளுக்கு நோ சொல்லிவிட்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உங்களின் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவகேடோ

அவகேடோ பழத்தில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் K போன்றவை ஏராளமாக உள்ளதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

முந்தரிப்பழம்

உலர்ந்த முந்திரிப்பழத்தில் விட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு, இதய நோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இதனால் நம் ஆயுளின் அளவு நீடித்து ஆரோக்கியமாக வாழலாம்.

பூண்டு

மருத்துவ குணம் நிறைந்த பூண்டை நாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள விட்டமின் B6, C போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்கள் வராமல் தடுக்கும். முக்கியமாக புற்றுநோய் தாக்காமல் தடுக்கிறது.

பார்லி

பார்லியில் உடலுக்கு ஆரோக்கியமான சத்துகள் இருப்பதால், உடலை பலவீனமாக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கிறது. குறிப்பாக குடல் புற்றுநோய், செரிமான பிரச்சனைகள், கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் போன்றவற்றை பார்லி உட்கொள்வதால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் நல்ல கொழுப்புக்களும், விட்டமின் K சத்துகள் உள்ளதால், சமைக்கும் போது ஆலிவ் ஆயில் பயன்படுத்தினால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.

முந்திரி பருப்பு

முந்திரி பருப்பில் இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. எனவே இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி கண் பார்வையை மேம்படுத்துகிறது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுத்து, சரும செல்கள் முதுமை அடையாமல் பாதுகாக்கிறது. இதனால் நீண்ட நாட்கள் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு உகந்ததாக உள்ளது.

2/5

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments