இடுப்பு பகுதியை ஃபிட்டாக்க வேண்டுமா? இதோ எளிய பயிற்சி

Report Print Kavitha in உடற்பயிற்சி

மனிதாக பிறந்த அனைவருக்குமே உடற்பயிற்சி என்பது இன்றியமையாது ஒன்றாக கருதப்படுகின்றது..

உடல் எடை முதல் எடை குறைப்பு அனைத்துக்குமே உடற்பயிற்சி முக்கியமானது ஆகும்.

அதிலும் தோள், வயிறு, இடுப்புப் பகுதி போன்றவை ஃபிட்டாக வைத்திருப்பது அவசியம்.

அந்தவகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 3 உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தால், மூன்றே மாதத்தில் அழகான ஃபிட்டான தோள், வயிறு, இடுப்புப் பகுதிகள் நிச்சயம் கிடைக்கும்.

தற்போது அந்த உடற்பயிற்சிகளை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

மாடிஃபைடு புஷ் அப்ஸ் (Modified push ups)
gethealthyu

முதலில் தரையில் முட்டிபோட்டு, கைகள் நேராகத் தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும்.

பாதங்களை சற்று தூக்கி, ஒரு பாதத்தின் மேல் மற்றொரு பாதம் வைத்து, முழு உடலையும் தரைப் பகுதி வரை இறக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது.

பின்னர், பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல 10 முறை செய்ய வேண்டும்.

இப்படி செய்வதனால் நெஞ்சு, மேல் வயிறு, கை பகுதி மற்றும் உள் தசைகள் (கோர் மசில்) உறுதியாகும்.

பேசிக் கிரன்சஸ் (Basic crunches)

முதலில் தரையில் நேராகப் படுத்து, கால் முட்டிகளை மடக்கிவைக்க வேண்டும்.

இதன் பின் கைகளை, தலைக்குப் பின் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது, உடலின் மேல் பகுதியை முட்டி வரையில் கொண்டு சென்று பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி 8-10 முறை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் வயிற்றுப்பகுதி அழுத்தப்படுகிறது. வயிற்றில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு, தசை வலிமை பெறுகிறது. தொப்பை கரையும்.

க்ரிஸ் கிராஸ் கிரன்சஸ் (Criss cross crunches)
gethealthyu

முதலில் தரையில் நேராகப் படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தலைக்குப் பின்புறமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் இருந்து, வலது கால் முட்டியை மடித்து, காலை வயிற்றுப்பகுதி நோக்கிக்கொண்டு வர வேண்டும்.

அதேநேரம், உடலின் மேல்பகுதியையும் வயிற்றுப்பகுதி நோக்கி கொண்டுவர வேண்டும். பின்னர் இதே போல இடது காலுக்குச் செய்ய வேண்டும். இதுபோல் 8-10 முறை செய்ய வேண்டும்.

இதனை செய்வதனால் மேல் மற்றும் அடி வயிற்றுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. கொழுப்பு குறைந்து, தசைகள் வலுவடைகிறது. இடுப்பு பகுதிக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்கும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...