பெண்களை தினமும் இந்த பயிற்சியை செய்து வாருங்கள் : மாதவிடாய் பிரச்னையிலிருந்து விடுதலையடைய முடியுமாம்!

Report Print Kavitha in உடற்பயிற்சி

மாதவிடாய் சுழற்சியானது பெண்களுக்கு 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் தவறாமல் ஏற்படுகிறது.

இந்த மாதவிடாய் சுழற்சியானது, 40 நாட்களுக்கு மேல் வராமல் இருந்தால், அவர்களின் உடல் நிலையானது ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம் எனப்படுகின்றது.

அந்தவகையில் இதனை போக்க சில உடற்பயிற்சிகள் மற்றும் யோகசானங்கள் பெரிதும் உதவி புரிகின்றது.

அதிலும் குறிப்பாக பச்சிமோஸ்தாசனம்என்ற யோகாசனம் இந்த பிரச்னையிலிருந்து விடுபட பெரிதும் உதவி புரிகின்றது.

தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

செய்முறை
augustyoga

முதலில் விரிப்பில் கால்களை நீட்டி கிழக்கு திசை நோக்கி அமரவும்.

அதன் பின் கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து மடிக்காமல் தலைக்கு மேல் உயர்த்தவும்.

மெதுவாக முன்னால் குனிந்து கால்களை மடிக்காமல் கால் விரல்களை தொட முயற்சிக்கவும்.

இரு கைவிரல்களாலும் இரு கால்விரல்களை தொட முயற்சிக்கவும். பின் கால் கட்டைவிரல்களைப் பற்றி மேலும் குனிந்து நெற்றியை கால் முட்டிகளின் மீது வைத்து கைகளை மடித்து கை முட்டியை விரிப்பின் மீது வைக்கவும்.

மூச்சை அடக்கி ஒரு பத்து விநாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு கட்டை விரலை பிரித்து கைகளை நீட்டி மெதுவாக எழுந்து நிமிர்ந்து உட்காரவும்.

இவ்வாறு மூன்று முறைகள் செய்யவும். முதலில் பயிற்சி செய்யும் பொழுது கால் விரலைத் தொடுவதே சிரமமாக இருக்கும்.

ஒரு மூன்று மாதங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் உங்களால் முழுமை நிலையினை அடைய முடியும்.

பலன்கள்
  • இந்த ஆசனத்தை செய்வதின் மூலமாக தங்கள் உடலில் பூரண ஆரோக்கியத்தை அடையலாம்.
  • கருப்பையில் தோன்றும் வியாதிகள் யாவும் சரியாகும். பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அடிவயிற்று பெருக்கத்தை இந்த ஆசனம் சரி செய்துவிடும்.
  • உடலுறவில் நாட்டமில்லாத திருமணமான பெண்கள் இவ்வாசனம் செய்தால், அதற்குரிய ஹார்மோன்கள் சரியாக சுரக்கும்.
  • சிறு வயதிலிருந்து தொடர்ந்து செய்தால் 60 வயது ஆன பிறகும் தோல்களில் சுருக்கங்களோ, முடி நரைப்போ ஏற்படாது என்று யோக சாஸ்திரம் கூறுகின்றது.
  • சிறுநீரகம் சம்மந்தமான குறைபாடுகள் நீங்கும். தொடர்ந்து செய்தால் மஞ்சள் காமாலை, புற்றுநோய் வராது.
  • நுரையீரல் பலப்படும், தசைவலி, வாதக்கோளாறுகள் நீங்கும். பசியின்மை, நீரிழிவு, மலச்சிக்கல் நீங்கும். நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகின்றது. ஆண்களுக்கு விந்து ஒழுக்கை தடுக்கும்.
  • பெண்களின் எண்ணங்கள் திடப்படும். மனோதைரியம் கிடைக்கும். நேர்மையான எண்ணங்கள் பிறக்கும்.
  • இந்த ஆசனம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் ஆனந்த வாழக்கையும் அளிக்க வல்லது.
குறிப்பு

அடி முதுகு வலி, முதுகுத் தண்டு கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனம் செய்ய வேண்டாம். கல்லீரல், மண்ணீரல் வீக்கம், அல்சர் நோய் உள்ளவர்கள் யோகாசன வல்லுநரின் நேரடி ஆலோசனையின் படி பயிற்சி செய்யவும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்