தினமும் 15 நிமிட உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது எல்லா மனிதனுக்கு தேவையான ஒன்றாக இந்த காலகட்டத்தில் மாறி விட்டது.

நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதற்கு உடற்பயிற்சி பெரிதும் பயன்படுகிறது.

இதற்கு கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க முடியும் என்பது கிடையாது 15 நிமிடம் செய்தாலே போதுமானது.

அந்தவகையில் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

Google

  • ஒரு நாளைக்கு 15 நிமிடம் நடைபயிற்சியை மேற்கொண்டால் மனிதனின் இறப்பு விகிதம் 22 சதவீதம் குறையும்.
  • ஒரு நாளைக்கு 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் சர்க்கரை நோய் வராது.
  • இவ்வாறு 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் உடல் எடை அதிகரிக்காது. எடை சீராக இருக்கும்.
  • தினமும் அதிகாலை 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் நமது உடலில் உள்ள விட்டமின் டி-யின் அளவு மிகவும் அதிகரிக்கும்.
  • 15 நிமிட நடைபயிற்சியின் மூலம் கேன்சர், புற்றுநோய், மார்பக புற்று நோய் ஆகிய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
  • நமது இதயம் ஆரோக்கியமாக மற்றும் சீராக இருப்பதற்கு இந்த 15 நிமிட நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • 15 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதனால் மனஅழுத்தத்தை தவிர்க்கலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers