உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? இந்த பயிற்சிகளில் ஒன்றை செய்திடுங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

உடல் எடை குறைக்க நினைப்போர் எப்படி உடல் எடையை குறைக்க வழிமுறைகள்,பயிற்சிகளும் இருக்கின்றனவோ அதைபோல உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கும் இலகுவாக வழிகள் நிறைய இருக்கின்றன.

அந்தவகையில் உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கான சில எளிய யோகப்பயிற்சிகளை பற்றி பார்ப்போம்.

புஜங்காசனம்

இந்த ஆசனம் செய்வதற்கு படத்தில் காட்டியவாறு முதலில் குப்புறப் படுக்க வேண்டும்.

பின் கைகளை படத்தில் காட்டியவாறு முன்புறம் வைத்து நீட்டி, உடலை மேலே தூக்க வேண்டும். இந்நிலையில் மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.

இப்படி 2 முறை என ஒவ்வொரு முறைக்கும் 10 நொடிகள் இடைவெளி விட்டு செய்ய வேண்டும்.

சர்வங்காசனம்

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் கால்களை நீட்டி படுக்க வேண்டும்.

பின் படத்தில் காட்டியவாறு கீழ் உடலை மெதுவாக மேலே தூக்க வேண்டும்.

உடலின் மொத்த சுமையையும் தோள்பட்டை சுமக்க வேண்டும். பின்பு படத்தில் காட்டப்பட்டவாறு கைகளால் உடலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆசனத்துடன், ஒருவர் சரியான டயட்டையும் மேற்கொண்டால், உடல் எடை அதிகரிப்பது உறுதி.

வஜ்ராசனம்

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் முழங்கால் போட்டு, குதிகால்களின் மீது அமர வேண்டும்.

பின் கைகளை முழங்கால்களின் மீது நீட்டி வைக்க வேண்டும். இந்நிலையில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, வெளி விட வேண்டும்.

பவனமுக்தாசனம்

முதலில் தரையில் படுத்து, கால்களை படத்தில் காட்டியவாறு மடித்துக் கொள்ள வேண்டும்.

பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளால் கால்களை இறுக்கமாக இழுத்து, நெஞ்சோடு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கால்களை விடும் போது, மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும். இப்படி 5-10 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

மட்ஸ்யாசனம்

இந்த ஆசனம் செய்வதற்கு தரையில் முதலில் படுக்க வேண்டும். பின் கைகளை படத்தில் காட்டியவாறு பிட்டத்தின் அடியில் வைக்க வேண்டும்.

அதன் பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து உச்சந்தலையானது தரையைத் தொடும் படி செய்ய வேண்டும்.

பின்பு தலையை சாதாரண நிலைக்கு கொண்டு வரும் போது மூச்சை வெளிவிட வேண்டும்.

சவாசனம்

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுக்க வேண்டும். பின் உள்ளங்கை மேல் நோக்கியவாறு கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும்.

இந்நிலையில் உடலை ரிலாக்ஸாக வைத்து, கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும்.

உட்டாசனம்

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் நேராக நிற்க வேண்டும்.

பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு படத்தில் காட்டியவாறு முன்னோக்கி குனிந்து பாதங்களைத் தொட வேண்டும்.

இப்படி 5 நொடிகள் இந்நிலையில் இருக்க வேண்டும். அதன் பின் மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு பழைய நிலைக்கு செல்ல வேண்டும்.

கபல்பதி யோகா

இந்த யோகா செய்வதற்கு படத்தில் காட்டியவாறு கால்களை மடக்கி உட்கார்ந்து, கைகளை தொடையின் மீது வைக்க வேண்டும்.

பின் மூச்சை உள்ளிழுத்து, வேகமாக மூச்சை வெளிவிட வேண்டும். இப்படி 5 நிமிடம் செய்ய வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்