நடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in உடற்பயிற்சி

இன்றைய நவீன உலகில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையால் ஏராளமான ஆரோக்கிய பிரச்னைகளை தினமும் சந்தித்துக் கொண்டு வருகின்றோம்.

நடைபயிற்சி எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்றாகும். நமது வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.

நடைபயிற்சியைபழக்கமாக்கிக் கொள்வதால் ரத்த ஓட்டமானது சீராகிறது.

அதுமட்டுமின்றி இது நமது உடலை மற்றுமின்றி உள்ளத்தினையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.

அந்தவகையில் நடைப்பயிற்சி செய்வதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

நன்மைகள்
 • சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் குணமடைய உதவுகிறது.
 • இரத்த ஓட்டம் சீரடையும்.
 • நரப்பு தளர்ச்சி நீங்கி ,நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்
 • நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
 • அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.
 • முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.
 • எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.
 • எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
 • உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
 • கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.
 • மாரடைப்பு-சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது .
 • உடல் மற்றும் மன்ச்சோர்வினை குறைக்கிறது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்