தினமும் உற்சாகமுடன் செயல்பட வேண்டுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வதனால் அன்றைய தினம் முழுவதும் உற்சாகமாக இருக்கும் என பலர் கூறுவதுண்டு.

அந்தவகையில் விபரீதகரணி எனப்படும் ஆசனத்தை செய்வதனால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்கலாம்.

சமஸ்கிருதத்தில் விபரீத என்றால் தலைகீழான என்று அர்த்தம்.

கரணி என்றால் இயக்கம் என்பது பொருள். உடலானது சூரிய, சந்திர சக்திகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

கீழ்புறம் உள்ள சூரிய சக்தியை மேலே கொண்டு வந்து மேல்புறம் உள்ள சந்திர சக்தியை கீழே தள்ளுவது தான் விபரீதகரணி ஆசனம் ஆகும்.

தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

செய்முறை

முதலில் படத்தில் காட்டியவாறு ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும்

இரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும்.

கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில் சாய்த்துக் கொண்டே வந்து சரிந்த நிலையில் உள்ளங்கைகளில் அமர்ந்திருக்கும் உணர்வைப் பெறவும்.

பின்னர் இரண்டு கால்களையும் விரைப்பாக நீட்டி வைத்து நன்றாக சுவாசிக்கவும்.

பின்னர் நீட்டிக் கொண்டிருந்த கால்களை இரண்டையும் முழங்கால்களை மடக்காதபடி நன்றாக நடப்பது போன்று அசைக்கவும்.

பின்னர் இரண்டு கால்களையும் இரண்டு வட்டங்கள் வரைவது போன்று இடவலம், வலது இடம் என்று மாற்றி மாற்ற் சுழற்றவும்.

பின்னர் இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து மடக்கி மடக்கி நீட்டவும்.

கைகளில் தாங்கிப் பிடிக்க முடியவில்லை எனில் சுவற்றில் கால்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு தலைகாணியை எடுத்து பக்கபலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பயிற்சி செய்வதானல் நரம்பு மண்டலம் தூண்டப்படுவதால் உற்சாகம் கிடைக்கும். நினைவாற்றல் பெருகும். கால்வலி குணமாகும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்