பின்பக்கக் கொழுப்பை குறைக்கனுமா? அப்போ இந்த பயிற்சியை செய்திடுங்க

Report Print Kavitha in உடற்பயிற்சி

பொதுவாக பெண்களில் ஒரு சிலர் பாரப்பதற்கு ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் பின்பக்கம் அதிகளவு சதையுடன் காணப்படுவார்.

அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக தோற்றமளிப்பதுண்டு.

இதனை உடற்பயிற்சிகள் மூலம் எளிதில் குறைக்க முடியும். தற்போது வீட்டிலே செய்ய கூடிய எளிய உடற்பயிற்சி ஒன்றினை இங்கு பார்ப்போம்.

எப்படி செய்ய வேண்டும்?

முதலில் படத்தில் காட்டியவாறு இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில், முட்டியை மடக்கி பாதத்தின் மேல் உட்கார வேண்டும்.

முன் உடலை வளைத்து, கைகளைத் தரையில் ஊன்றி, (யானை போல்) நிற்க வேண்டும். தலை தரையைப் பார்த்தபடி இருக்கட்டும்.

இப்போது வலது கால் முட்டியை மடக்கி, மேல நோக்கி உயர்த்தி இறக்க வேண்டும். பின்னர், இதேபோல இடது கால் முட்டியை மடக்கி உயர்த்தி இறக்க வேண்டும்.

இது தான் ஒரு செட், இதேபோல ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பின்பக்கம் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்த ஒரு மாதத்திலிருந்தே படிப்படியாக வித்தியாசம் தெரிவதை காணலாம்.

மேலும் பின்பக்கக் கொழுப்பு குறைந்து, குளூட்டியஸ் (Gluteus) எனப்படும் பின்பக்கத் தசைகள் வலுவடையும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers